இந்த வானம் வண்ணமயமா இருக்கு! பூமி புன்னகையா இருக்கு இப்படி எல்லாம் நான் கதையை ஆரம்பிக்க போறது கிடையாது. ஸ்ட்ரைட்டா ஸ்டோரி குள்ள போறேன். கவிதை வர்ணனை இதையெல்லாம் எதிர்பார்க்கிறவங்க இப்போவே இந்த கதையை கடந்து போயிடலாம். Hot and spicy ah direct ah அதிரடியா கதைல இறங்க போறேன்.
🌶️🌶️🌶️
அப்பா ப்ளீஸ்பா! என்ன விட்டுடுங்கப்பா! நான் இப்படியே இங்கிருந்து எங்கேயாவது போயிடுறேன்! ஆனால் எனக்கு இந்த கல்யாணம் மட்டும் வேணாம்பா!... என்ன அவள் கெஞ்ச
அவளுடைய திமிர்! அகம்பாவம்! தைரியம்! மிரட்டலான பேச்சு! யாரையும் மதிக்காத அவளுடைய கர்வம்! அனைத்தையும் தாண்டி தன் மகள் இந்த காலை நேரம் கண்ணீர் விடுப்பதை பார்த்து விசுவர்த்தனன்னால் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியவில்லை. அவள் கண்ணம் பற்றி
"என் செல்லம் இல்ல! என்னைக்காவது என் தங்கத்துக்கு நான் பிடிக்காததை செஞ்சிருக்கேனா! இத்தனை வருஷம் உனக்காக இந்த அப்பா எவ்வளவு செய்திருப்பேன். எனக்காக இந்த ஒரே ஒரு கல்யாணம் மட்டும் பண்ணிகோ சாமி!" என அவர் கொஞ்ச
அப்பா உங்களுக்கு புரியலையா! நான் எப்படி வாழ்ந்த பொண்ணு! அட்லீஸ்ட் எனக்கு நீங்க ஒரு அப்ராட் மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு! ஆனால் ஆனால்.... நீங்க சம்பந்தமே இல்லாம நைட்டோட நைட்டா ஏதோ ஒரு பட்டிக்காட்டுக்கு அழைச்சிட்டு வந்து இப்படி விடியற்காலையில் யாருன்னே தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஒத்த கால்ல நிக்கிறீங்க. நான் என்னப்பா பண்ணுவேன்? என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சீங்களா? அது மட்டும் இல்லாம என் மனசு என் மனசு வேற ஒருத்தர் கிட்ட இருக்குப்பா! உங்களுக்கே தெரியும் அஜய்யை நான் எவ்வளவு லவ் பண்றேன்னு! ஏம்பா உங்க பொண்ணு சந்தோஷத்தை பத்தி நீங்க கொஞ்சம் கூட யோசிக்கலையா?... என அவள் இப்போது தன் தாயிடம் திரும்பி
அம்மா நீங்களாவது சொல்லுங்கம்மா! நான் அஜய்யை கல்யாணம் பண்ணிக்காம கூட இருக்கேன்! நான் அவனை மறந்துடுறேன்! ஆனா எனக்கு இன்னைக்கு மட்டும் கல்யாணம் வேண்டாம்! நீங்க எப்படியாவது அப்பா கிட்ட சொல்லுங்கம்மா! நீங்க சொன்னா அப்பா கண்டிப்பா கேப்பாங்க!...
மகள் தன் கையைப் பிடித்து அழ செய்வதறியாமல் விழித்தார் அவளுடைய தாய் மீனாட்சி.
மனைவி விழிப்பதை கண்டவர் கண்களால் அழாதே என்று மிரட்டிவிட்டு
"சாக்ஷிதா! அப்பா உனக்கு எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கு தான்னு தெரியாதா! இப்ப வந்து அடம் பிடிச்சா என்ன செய்ய முடியும்! கல்யாண பேச்சு எடுக்கும் போது நீதானே உங்க இஷ்டம்னு. உங்க விருப்பப்படி எதுனாலும் செய்யுங்க. என்னோட வேலை கழுத்தை நீட்டுறது மட்டும் தானே? நீங்க எப்ப சொன்னாலும் நான் அதை செய்யறேன். அப்படின்னு சொன்ன? .....!" என அவர் கேட்க
அப்பா அது நான் கோவத்துல சொன்னது! அதுக்காக நீங்க இத்தனை தூரம் கொண்டு வந்து விடுவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல அப்பா! இப்ப கூட உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு தானே என்னை பிளைட் ஏறி வர வச்சீங்க! ஆனா நீங்க இப்படி எதுவும் சொல்லாம கையோட அழைச்சிட்டு வந்து மணமேடைல நிறுத்த வைப்பீங்கன்னு நான் என்ன கனவா கண்டேன்!... என அவள் அதற்கு மேல் முடியாமல் பொறுமை இழந்து பரிதாபமாய் பதட்டத்துடன் கூற
அதற்குள் மணமகளின் அறைக்கதவு தாடார் தடால் என அடித்தது.
ஏற்கனவே கதி கலங்கி இருக்கும் நிலையில் திடீரென அந்த சத்தம் அவளை உண்மையில் அச்சுறுத்தியது.
ஹா.... அவள் பயத்தில் மூச்சிரைக்க கத்தியே விட்டால்
சாக்ஷிதா! ஒன்னுமில்ல..... ஒன்னுமில்ல என விசுவர்த்தனன் அவள் கையைப் பிடித்து எழுப்பி விட
"அப்பா பிள்ஸ்பா!..." என அவள் மயிலிறகை போல் மையிட்ட அழகிய விழிகள் இப்படி கண்ணீர் சிந்துவதை பார்க்க முடியாமல் அவள் கண்களை துடைத்து விட
"அண்ணா! பொண்ண மணமேடைக்கு அழைச்சிட்டு வர சொல்றாங்க!"....என கதவிற்கு வெளியே இருந்து குரல் வர
"இதோ மா ஒரு நிமிஷம்!" என அவர் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக கூற அதை பார்த்தவளுக்கு இதயமே வெடித்தது
இதற்கு மேல் என்ன சொன்னாலும் தன் தந்தை சிறிதும் செவி கொடுத்து கேட்க போவதில்லை. எத்தனை கண்ணீர் வடித்தாலும் அதற்கு கவலையும் பட போவதில்லை... என அவளுக்கு தெளிவாக புரிந்தது.
அவளுடைய தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய குறைய இயலாமை எனும் உணர்ச்சி பொங்கி எழுந்தது. அது இப்போது கோபமாக மாற
தன் முகத்தில் இருக்கும் விசுவர்த்தனின் கையை பட்டென வேகமாக தட்டி விட்டாள்
"உங்களுக்கு உங்க பொண்ணு பத்தி கவலையே இல்லப்பா! பிடிக்காத ஒரு வாழ்க்கையை என் தலையில கட்றீங்கப்பா! உங்களை பொறுத்த வரைக்கும் பொண்ணு பெத்துட்டா எங்கேயாவது போய் தள்ளிவிட்டுடனும்! யார் தலையிடையாவது கட்டி விடணும்! அப்பதான் உங்களுக்கு நிம்மதி இல்ல! அப்போது உங்க கடமையை நிறைவேத்திருவீங்களா?...
மீனாக்ஷி கதவை திறக்கவும்
விசுவர்த்தனன் ஏதோ கூற வரவும் அவர் முன் கையை நீட்டி தடுத்தவள்.
"பேசாதீங்கப்பா! நான்... நா.... என்ன...... என்.....
வார்த்தைகள் வராமல் போக
அழுகையை அடக்கியவள்
"உங்க பொண்ணு செத்துட்டேன்னு நினைச்சுக்கோங்கப்பா! என அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் சாக்ஷிதா.
பாவம் அடுத்த அதிர்ச்சியை அவள் எதிர்பார்க்காமல் நடந்து போகிறாள். என்ன செய்யப் போகிறாளோ? தெரியலையே?
🌶️🌶️🌶️
நீலாம்பரி எந்த முடிவா இருந்தாலும் இப்பவே யோசிக்க மா... அப்பா மேல இருக்கிற கோவத்துல போய் கழுத்த நீட்டிடாத மா.... நான் சொல்றது சொல்லிட்டேன்.
அடுத்து என்ன நடக்க போகுதுன்னு அடுத்த எபிசோட்ல பாப்போம்
கதைய புடிச்சிருந்தவங்க கண்டிப்பா கமெண்ட் பண்ணிட்டு போங்க....
இனி கதை விறுவிறுப்பாக போகும்.
Write a comment ...