வெளியில் நிற்கும் சீத்தாவை சாக்ஷா மேலும் கீழும் ஒரு முறை பார்த்து முகத்தை சுழித்தவள் . அவரை தாண்டி செல்ல அதர்குள் நான்கு பெண்கள் அவள் முன் வந்து அவளை அழைத்து செல்ல ஏனோ அந்த பெண்களின் கிராமத்து வாசமும் அவர்களுடைய உருவமும் நிறமும் பார்க்கவே பிடிக்க வில்லை.
மேலும் ஒரு பெண் அவள் கையை பிடிக்க வேகமாக விலக்கி விட்டாள். காரணம் அவள் முகத்தில் இருக்கும் மஞ்சள்.
தான் உபயோகிக்கும் லோஷன்களை எல்லாம் ஒரு முறை யோசித்து பார்த்தவளுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது.
அதற்குள் ஒரு பெண் அவளை பார்த்து "ஹ.......!" என வாயை பிழக்க ஷாக்ஷா என்ன என்பது போல் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.
"அதுல்யா! உங்க அண்ணன் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான்!" என்றாள் ஷாக்ஷாவின் நிறத்தை பார்த்து மயங்கிய ஒரு பெண்.
"சும்மா சொல்லக்கூடாது! வெளி நாட்டில் படிச்சவங்கல! அப்படி தான் இருப்பாங்க!" என மற்றொரு பெண் சொல்ல அவளுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாமா போல் இருந்தது.
அதே சமயம் அங்கே வெள்ளை நிற திரை ஒன்று பெரிதாக இருக்க அதன் அருகில் சென்று ஷாக்ஷாவை அமர வைத்தனர் அனைவரும்.
அவள் முன் இருக்கும் அந்த யாகத்தின் நெருப்பு வெளிச்சம் மட்டும் தான் அந்த விடியற் காலையில் அங்கு அவளை சுற்றி உள்ள சில நபர்களை மேலோட்டமான காண்பித்தது.
ஐயர் ஏதேதோ மந்திரங்களை மைக்கில் கூறிக் கொண்டு அவள் கையில் பூவை திணித்தார். தன் முன்னால் இருக்கும் கலசத்திற்கு அதை துவச் சொல்ல அவளும் வேண்டா வெறுப்பாக அவ்வாறே செய்தால். பிறகு அந்த ஐயர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டிருக்க இடையில் திரைக்கு அந்தப்புரம் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையையும் அதையே செய்ய சொல்லிக் கொண்டிருந்தார். அங்கு நடக்கும் எதையும் அவள் சரியாக கண்டு கொள்ளவில்லை. என்ன தான் ஐயர் சொல்வது அவள் கைகள் செய்து கொண்டிருந்தாலும் அவள் மனமோ அஜயை மட்டும் தான் யோசித்து கொண்டு இருந்தது.
மைக்கில் நல்ல நேரம் நெருங்கி விட்டது.... என அந்த மங்கள நாணை ஐயர் எடுத்து மாப்பிள்ளை நோக்கி பயணிக்க
"லைட்ஸ் ஆன்!" என அங்குள்ள போட்டோகிராபர் கத்த...
அருகில் உள்ள திரை வேகமாக விலக
திடீரென மின்னல் போல் தன் முகத்தில் படும் மின்சார ஒலிகளில் கண்ணை வேகமாக ஷாக்ஷா இறுக்கி மூட....
நாதஸ்வர ஒலி முழங்க மேலதாளம் ஒலிக்க
மனம் திக் திகெனும் தருணங்களில் மூழ்கி இருக்க
அனைத்தும் அவளுக்கு மட்டும் ஸ்லோ மோஷனில் சென்றது.
"பீ.... பப்பி..... டம்... டும்.... டம்...!"
அவ்வளவு தான் தன் வாழ்க்கையே முடிந்தது.... என அவள் மனம் அடித்துக் கொண்டது.
"லப் டப்....."
"லப் டப்..."
"லப் டப்....."
"லப் டப்....."
தன்னை நிதானம் செய்தவள் கண்களை மெதுவாக திறக்க அந்த புகை மூட்டத்தில் லேசாக தெரிந்தது என்னவோ அவள் கழுத்தில் மங்கலநாணை முடியிட்டு கொண்டிருக்கும் அந்த ஆண்டவனின் கைகள் மட்டும் தான்.
அந்த கைகளின் நிறத்தை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானவள் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏனோ அந்த மேகமூட்டத்திலும் அவன் இருக்கும் நிறத்திலும் கரடி குட்டி போன்ற அவனின் தலை முடியிலும் முறுக்கிய மீசையுளும் அதிர்ந்தவளுக்கு உண்மையில் அவள் வாழ்வை சீரழிக்க வந்த எமதர்மனாகவே தெரிந்தான் அவன்.
தான் காதலித்த அஜய் இங்கே என்னை கல்யாணம் செய்யும் இவன் இங்கே?
எத்தனை பேரை பாரபட்சம் பார்க்காமல் கேலி செய்திருப்பாள். எத்தனை பெண்களின் சாபமோ? அந்த கடவுளுக்கும் அவளுக்கும் மட்டும் தான் தெரியவில்லை.
அவள் பார்த்த பார்வையில் இரண்டு அடி பின் நகர்ந்தான் ஆடவன். இருப்பினும் அவன் கவனம் அந்த நாணின் கடைசி முடியில் தான் இறுக்கம் கொண்டு நின்றது.
அவளுடைய பார்வை அவனை இன்னும் நீங்காமல் இருக்க இவன் தான் இப்போது வெட்கம் கொண்டு திரும்பினான்.
"அண்ணனை பார்த்தது போதும் அண்ணி! அங்க போட்டோவுக்கு போஸ் கொடுங்க!" என கூட்டத்தில் அவள் பின்னால் ஒரு பெண் குரல் கொடுக்கா அப்போதுதான் அவள் பார்வையே அந்த ஆடவனிடம் இருந்து திரும்பியது.
திரும்பியவளுக்கு மேலும் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
பயத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீரே கசிந்து விட்டது.
🌶️🌶️🌶️🌶️
இப்படி அழுதா எப்படிமா? இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!..... சரி வாங்க நெக்ஸ்ட் எபிசோடுக்கு போகலாம்.
மறக்காம கமெண்ட் பண்ணுங்க. ஸ்டோரி உண்மையாவே உங்களுக்கு புடிச்சிருந்தா லைக் போடுங்க....
இந்த புது ஸ்டோர் எப்படி இருக்குன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்.
என்னாலையும் அதுக்கேத்த மாதிரி தினமும் எபிசோடு போட முடியும்
கொஞ்சம் கருணை காட்டுங்க ரீடர்ஸ்..... பிளீஸ் ❤️❤️❤️
Write a comment ...