இது உண்மையில் கல்யாண மண்டபமா? இல்லை மாநாடு நடக்கும் அரங்கமா? என்று அவளுக்குள் கேள்வி தான் எழுந்தது.
கூட்டம் என்றால் அவளுக்கு மிகவும் அலர்ஜி. பத்து நிமிடத்திற்கு மேல் அவள் தாய் தந்தையையே அவள் அறையில் இருக்க விட மாட்டாள். அத்தனை தனிமை விரும்பி அவள். தனக்கான இடமும் தனக்கான நேரமும் இப்படி தான் இருக்க வேண்டும் இப்படி மட்டும் தான் இருக்க வேண்டும் என எப்போதும் திட்டம் போட்டு வாழ்பவள்.
தாய் தந்தையை மீறி யார் தன்னை நெருங்கினாலும் ஆதாரம் இல்லாமல் தன்னை நெருங்க விட மாட்டாள். அப்படிப்பட்டவள் இதோ இப்போது யார் என்றே தெரியாத பெரியவர்களின் கால்களில் விழுந்து கொண்டிருக்கிறாள்.
என்னதான் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அவர்களுடைய பேச்சு வழக்கமும் அவர்களுடைய நடைமுறையும் ஏதோ ஒன்று அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது. உண்மையில் அது நல்ல விதத்திலா இல்ல கெட்ட விதத்தில் என்று கேட்டால் அவளுக்கே விடை தெரியாது?... ஆனால் நடக்கும் அனைத்தையும் அங்குள்ள அனைவரையும் பார்க்கும்போது பயம் மட்டுமே அவளுக்குள் வெகுவாக குடி கொள்கிறது என்பதுதான் நிசர்த்தனம்.
ஆசிர்வாதம் வாங்கி வாங்கி இடுப்பு வலி எடுத்தது தான் மிச்சம். அதற்கு மேல் அவளால் முடியவில்லை. இடுப்பை பிடித்து நின்று விட்டால். இறுதியாக ஆசீர்வாதம் செய்ய அவள் முன் வந்து நின்றனர் அவளுடைய தாய் மீனாட்சி தந்தை விசுவர்த்தனும்.
அத்துணை நேரம் அவள் அருகில் கூட நிற்காமல் எங்கு சென்றனர் என்கிற கோபம் ஒரு பக்கம். விருப்பமில்லாத கல்யாணத்தில் வற்புறுத்திய கோபம் ஒரு பக்கம். எல்லாவற்றிற்கும் மேல் எப்படிப்பட்ட ஒரு கேவலமான மாப்பிள்ளையின் தலையில் தன்னை கட்டி வைத்திருக்கிறார் என்கிற மாபெரும் கோபம் முன் பக்கம். இத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை தள்ளி விட்டு கண்ணீரை வடிக்கும் அவர்களுடைய முகத்தைப் பார்க்க இத்தனை நேரம் இருந்த கோபங்கள் எல்லாம் எரிமலையாய் வெடித்தது அவள் கண்களில்.
மாமனார் மாமியார் கால்களில் மாப்பிள்ளை மட்டும் விழ மணப்பெண் மட்டும் கோபமாய் நிற்க்க சட்டென அந்த சூழ்நிலையை சமாளிப்பது போல் விசுவர்த்தனன் வேகமாக அவளை கட்டிக் கொண்டு அழத் தொடங்கினர்.
"நடிக்காதீங்கப்பா!" என அவள் பற்களை கடித்துக் கொண்டு கூறினால்
ஐயோ கண்டுபிடிச்சிட்டாலே! என தெளிவடைந்தவர் அதை மேலும் சமாளிக்கும் வண்ணம்
"இருக்கட்டுமா! என் மக என் கால்ல விழுந்து தான் ஆசீர்வாதம் வாங்கணும்னு இல்ல! இந்த அம்மா அப்பாவோட ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு இருக்கும்!" என்ற நீல கண்ணீரை வடித்துக் கொண்டே ஒரு நாடகத்தை சிறப்பாய் நடத்தினார் விசுவர்த்தனன்..
அதே சமயம் தன் மாப்பிள்ளையையும் எழுப்பி கட்டிப் பிடித்தார்.
அவர் நாடகத்தை அதோடு நிறுத்தக் கூடாதா....
எரியும் விளக்கில் எண்ணெய் ஏற்றினால் கூட பரவாயில்லை ஆனால் இவரோ ஓர் பெரிய கற்பூர கட்டியை அதில் வைப்பது போல்
"சீக்கிரம் எனக்கு என் ஜூனியர் பொண்ணையோ இல்லை ஜூனியர் மாப்பிலையையோ கொடுத்திடிங்க! போதும்! கடைசி காலத்துல நாங்க வேற என்ன எதிர்பார்க்கப் போறோம்!" என மேலும் நீல கண்ணீர் வடிக்க அவ்வளவு தான் சப்த நாடியும் அடங்கியது சாக்ஷாசாவுக்கு.
ஐயோ! கொஞ்சம் சும்மா இருங்க! தேவையில்லாத வார்த்தையை விடாதீங்க! என்னதான் ஆகல நீங்க அனுப்பி வச்சாலும் மறு வீட்டுக்கு மறுபடியும் நம்ம வீட்டுக்கு தான் வருவா! அப்போ உங்க நிலைமை கொஞ்சம் யோசிச்சு பார்த்து பேசுங்க?..... என தன் கணவரை சாஷ்டங்கமாக திட்டினார் மீனாட்சி.
அடுத்து என்ன செய்யப் போகிறாள்? என்ன செய்ய காத்துக் கொண்டிருக்கிறாள்?....
வாங்க அடுத்த எபிசோடு போவோம்....
🌶️🌶️🌶️🌶️🌶️
எபிசோட் வாசிச்சதும் மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
நம்ம கதை ஹீரோவோட ஆட்டிட்யூட் எப்படி இருக்கும்னு நீங்
க கெஸ் பண்றிங்க? கமெண்ட்ல போடுங்க?
Write a comment ...