04

தகப்பா

கோபத்தில் அருகில் உள்ள சேர் ஒன்றை எடுத்து சுத்தி சுத்தி அவளுடைய அப்பாவை அடிக்க தொடங்கினாள். தந்தை என்று கூட பாராமல் அவர் சட்டையை பிடித்து கீழே தள்ளி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு கிடைத்தது அங்குள்ள ஒரு குடம் தண்ணீர்.

அதை அப்படியே கொண்டு வந்து விசுவர்தனின் தலையில் கவிழ்த்தாள்.

திடீரென தன் மணிக்கட்டில் உணர்ச்சி தோன்ற நிகழ் காலத்திற்கு வந்தாள் சாக்ஷா.

இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்ற கனவு தான் அவளுக்கு வந்து சென்றது பாவம்.

மணமகன் அவள் மணிக்கட்டை பிடித்து நடந்து கொண்டிருந்தான்.

மூக்கு புடைக்க அதை முறைத்து பார்த்தவள் வேகமாக அவனின் கையை தட்டி விட்டாள்.

அவள் செயலில் சற்றே அதிர்ச்சி தான் அடைந்தான் நம் கதாநாயகன்.

வேகமாக திரும்பி பார்க்க "எனக்கு நடக்க தெரியும்!" என்று முறைத்து விட்டு முந்திக் கொண்டு அவள் செல்ல அங்குள்ள அனைவரும் அந்த செயலை விளையாட்டாகவே பார்த்தனர்.

"மாப்பிள்ளையை விட பொண்ணு தான் ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க போல!" என அங்குள்ள வயது பெண்கள் தன் முறை மாமனை சீண்ட அவன் ஓர் மெல்லிய சிரிப்பில் கடந்து செல்லலானான்.

அங்குள்ள அனைவரும் அவரவர்களின் காரில் ஏறிக் கொண்டு செல்ல மணமகன் சாக்ஷாவை காரில் ஏறு மாரு கார் கதவை திறந்து நின்றான்.

அவள் வேகமாக காரின் பின் பக்கம் சென்று கதவை திறந்து உள்ளே அமர செல்ல

"வேகமாக அவளை தள்ளி விட்டு உள்ளே சென்று அமர்ந்தனர் மணமகனின் இரண்டு முறை பெண்கள்.

"ஹே... அங்க தான் பெரிய வண்டி போகுதுள்ள! அதுல ஏறி போக வேண்டியது தானே! எதுக்கு இப்ப இந்த கார்ல வந்து ஏறீங்க?" என அதுள்யா இந்த பெண்களை கேட்க

"அதுல இடம் இல்ல!..." என அந்த இரண்டு பெண்களும் முகத்தை சுழிக்க

"அண்ணி நீங்க முன்னாடி உட்காருங்க!" என்ற அதுல்யா பின்னால் அந்த பெண்களுடன் அமர்ந்து கொண்டாள்.

போகும் வழி எங்கும் அந்த பெண்கள் மணமகனையும் இவளையும் வம்பிலுத்தே பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் சாக்ஷாவுக்கு தலை வலியே எடுத்துக் கொண்டது.

அவர்களுடைய மொழியும் பேச்சும் சகிக்க வில்லை அவளுக்கு.

அதுல்யா ஓரளவிற்கு சாக்ஷாவின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அண்ணிக்கு இது போன்ற பேச்செல்லாம் பிடிக்காது போலும் என நினைத்தவளுக்கு அதே சமயம் தன் அண்ணனின் பார்வை கண்ணாடியில் அவளிடம் ஏதோ கூறியது

உடனே 'கொஞ்ச நேரம் சும்மா தான் வாங்கடி! என அவள் கட்டுப்படுத்த முயன்றும் அது நடக்காமலே போக சட்டென காரில் எஃபெம்மை உயிர்ப்பித்து வால்யும் அதிக படுத்தினான் மணமகன்.

அந்த சத்தத்தால் மேலும் கோபமடைந்த சாக்ஷா "அப்பா!" என வெடித்து கத்த வேண்டும் போல் இருந்தது.

அந்த நேரம் பார்த்து நினைவில் வந்து நின்றார் விசுவர்தனன் அவள் கண் முன்.

"தகப்பா! உன்னை சும்மாவே விடமாட்டேன்! இப்ப மட்டும் என் கைல கிடைச்ச..... ஆ......!" என சத்தம் இல்லாமல் உள்ளுக்குள் குமுறி அழுதாள் சாக்ஷா.

என்னங்க இதுக்கே ஷாக் ஆகுறீங்க? இதுக்கு மேல தான் தெரிய போது அவ எவ்வளவு பெரிய டாட்ஸ் டெவில் பிரின்சஸ்ன்னு (dad's devil princess 😈)...

ஆனாலும் நீ ரொம்ப கஷ்டப்பட போறம்மா சாக்ஷா!... உன்னை விட உன்னோட புருஷன் தான் ரொம்ப பாவம்!.... உன்ன கட்டிக்கிட்டு என்ன எல்லாம் பாடுபட போறானோ தெரியலையே.....🥴🥴🥴🥴

வாங்க அடுத்த எபிசோட்ல பாப்போம் என்ன நடக்குதுன்னு....

🌶️🌶️🌶️🌶️

இன்னைக்கு எபிசோடு எப்படி இருந்ததுன்னு கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க

ஸ்டோர் எப்படி போகுதுன்னு யாராவது ஒருத்தராவது சொன்னாதான் உண்மையாவே எப்படி இருக்குன்னு எனக்கு தெரியும்.

அடுத்தடுத்த எபிசோடு போட எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்....

Don't hesitate to comment..... Plz♥️♥️♥️♥️ me pavam pa...

Write a comment ...

Write a comment ...