சாக்ஷா தன் கை கால்களை விரித்து முறித்து அவள் எப்போதும் பஞ்சு போன்ற போர்வைக்குள் நுழைவது போல் இன்றும் நுழைய அது அவளுக்கு நேர்த்தியாகவும் இல்லை. குளிருக்கு இதமாகவே இல்லை. எதோ ஒரு நெருடலை உணர்ந்தாள். உடனே தான் எப்போதும் கட்டி அனைக்கும் தலையணையை பிடித்து இழுத்து கட்டி அணைக்க அந்த தலையனையோ நகரவே இல்லை. மெதுவாக அவள் கண்களை விழித்து பார்க்க தூக்கி வாரி போட்டு எழுந்தாள்.
தலையணை என அவள் கணவனின் கையை பற்றி இழுத்து கொண்டிருக்கிறாள். அவனோ ஆழ்ந்த மூச்சை விட்டு நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
Write a comment ...