வாட் தி ஹெல்! வழக்கமா பேய் வெள்ளை கலர் புடவை தானே கட்டிட்டு அலையும்! இது என்ன வெள்ளை வேட்டி சட்டை போட்டு இருக்கு....! அட லூசு சாக்ஷி அது பாய் பேய் போல... ! " என தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க அந்த உருவத்தை மேலும் உற்று பார்த்தாள்.
அங்கே நின்றிருந்தது அவளுடைய கணவன் ராஜ வெற்றி தான். திக்கென இருந்தது அவளுக்கு. அவன் அமைதியாக ஒரு கல்லின் மேல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.
Write a comment ...