அறையில் யாரும் இல்லை. நீர் சத்தம் கேட்க அவன் குளிப்பதை அறிந்தவள் சற்று நிதானமாய் ஒரு பெரு மூச்சுடன் அந்த அறையை சுற்றி பார்த்தாள்.
மெத்தைக்கு மேல் அவனின் புகைப்படம் ஒன்று பெரிதாய் இருக்க அதையே இரண்டு நிமிடம் ரசித்தாள். பிறகு மெத்தையில் பார்க்க அங்கே அவனின் சட்டை ஒன்று தவழ்ந்திருந்தது. குளித்துவிட்டு வந்ததும் போட்டுக் கொள்ள வைத்திருக்கிறான் போலும். அதை தொட்டு பார்த்தவள் மெதுவாக தை எடுத்து அணைந்து கொண்டாள். கண்ணாடி முன்பு நின்றவள் அவனை போல ஒரு பார்வையை நிமிர்ந்து பார்த்து வைக்க பாவம் அவனை நினைத்ததற்கே அவளின் நாணம் சட்டென குடி கொண்டது.
Write a comment ...